Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிராமங்களில் உள்ள கலாசாரத்தை சீரழிப்பதற்கே கம்பெரலிய திட்டம்

July 23, 2018
in News, Politics, World
0

கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் காரணமாக மக்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நேற்று(22) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர்

கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

அனைத்து துறைகளிலும் பாரபட்சமற்ற அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டன. இந்தநிலையில், தற்போது அவை அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில், கிராமங்களில் உள்ள கலாசாரத்தையும் சீரழிப்பதற்கு கம்பெரலிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷவை தெரிவு செய்யும் போது பல பொறுப்புகளுடனும், சவால்களுடனுமே அவரிடம் நாடு கையளிக்கப்பட்டது. குறிப்பாக மக்களின் பொருளாதாரம் உள்ளிட்ட வாழ்வை அழித்த தீவிரவாதத்தை ஒழிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அதேபோல் விழுந்து கிடந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பொறுப்பும் அவரிடம் வழங்கப்பட்டது.

அந்த சவாலை ஏற்று மிக குறுகிய காலத்திற்குள் புரையோடி போயிருந்த தீவிரவாதத்தை அவர் முதலில் ஒழித்தார். அதேபோல் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி அபிவிருத்தியை முன்னெடுத்தார். வடக்கு, கிழக்கில் அழிந்து போன மனித வாழ்வை உயர்வடையச் செய்தார்.

அத்துடன் தென் பகுதியில் அபிவிருத்திகளை செய்து நாட்டை முன்னேற்றினார். மஹிந்த சிந்தனையில் மக்களை மையப்படுத்திய அபிவிருத்தியே காணப்பட்டது. அதற்கமையவே செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது இங்குள்ள மக்களின் விளைச்சல்களை களஞ்சியபடுத்தி சந்தைபடுத்துவதற்கான சந்தர்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும். அன்று மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு காணப்பட்ட சவால்களை வெற்றிகொண்டு காண்பித்தார். அதேபோல் அன்று அவர் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றினார். அன்று உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் தோற்கடிக்க முடியாது என கூறிய பயங்கரவாதத்தை வெற்றிகொண்டார்.

அதேபோல் சர்தேசம் வியக்கும் அளவுக்கு அபிவிருத்தி செயற்பாடுகளையும் முன்னெடுத்தார். அதற்கமைய மத்தல விமான நிலையத்தையும், ஹம்பாந்தோட்டை துறை முகத்தையும் அமைத்தார், ஜே.ஆர்.ஜயவர்தனவின் காலத்தில் இருந்து கனவாக காணபட்டவற்றை மஹிந்தவே நனவாக்கினார். எனவே அன்று நின்று போன பொருளாதாரத்தையும். அபிவிருத்திகளையும் நாம் மீண்டும் ஒன்றிணைந்து உருவாக்குவோம் என்றார்.

Previous Post

யானை தாக்கி பெண் ஒருவர் பலி

Next Post

புலிகளை மலினப்படுத்துவதில் அலி சாஹிரின் பங்கு

Next Post
புலிகளை மலினப்படுத்துவதில் அலி சாஹிரின் பங்கு

புலிகளை மலினப்படுத்துவதில் அலி சாஹிரின் பங்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures