மின்னேரிய, சிங்க உதாகம பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தபளவெவ காட்டு பகுதியில் வைத்து குறித்த பெண் மீது யானை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் படு காயமடைந்த பெண் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
தபளவெவ, ஜயந்திபுர பகுதியை சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடவம் பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

