ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள விமான நிலையத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கன் உப ஜனாதிபதி அப்துல் ராஷிட் டொஸ்டம் விமான நிலையத்தில் வந்திறங்கிய சிறிது நேரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனால், தாக்குலில் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகின்றது.
அரசியல் போட்டியாளர்களைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கும் அவர்களைக் கடத்துவதற்கும் அப்துல் ராஷிட் டொஸ்டம் உத்தரவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஒரு வருட காலத்திற்கு பின்னர் துருக்கிக்கு சென்றிருந்தார்.
குறித்த குண்டுத் தாக்குதலிற்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதன்போது கொல்லப்பட்டவர்களுள் பாதுகாப்புப் படையினர் 9 பேரும் போக்குவரத்து அதிகாரிகளும் அடங்குவதாகக் கூறிய காபூல் பொலிஸ் அதிகாரி ஹஷ்மேட் எஸ்டான்க்ஸாய், மேலும் 60 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

