முல்லைத்தீவு – செம்மலை கிழக்கு, நீராவியடி ஏற்றப் பகுதியில் விகாரை அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா – லோகேஸ்வரன் தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளார்.
கரைதுறைப்பற்று பிரதேச சபையின் அமர்விலேயே அவர் இந்த தீர்மானத்தினை முன்வைத்துள்ளார்.
செம்மலை கிழக்கு, நீராவியடி ஏற்றப்பகுதியில் தமிழ் மக்களின் காணியை அபகரித்து விகாரை அமைக்கும் முயற்சி ஒன்று இடம்பெற்று வருகின்றது. இதற்காக ககுறித்த பகுதியை அளவீடு செய்யும் முயற்சி ஒன்றும் இடம் பெற்றது. எனினும் மக்களின் எதிர்ப்பினால் அளவீடு செய்யும் பணி நிறுத்தப்பட்டது.மேலும் இந்த பகுதியில் உள்ள காணிகள் தமிழ் மக்களுடைய காணிகள் ஆகும். இதைவிட பிரதேச சபையின் அனுமதியின்றியே இந்த நடவடிக்கை சட்ட விரோதமாக இடம்பெறுகின்றது. இவ்வாறு தமிழ் மக்களின் காணிகளில் விகாரை அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

