வர்த்தகரின் வீட்டினுள் நள்ளிரவு வேளையில் புகுந்த நான்கு பேர் அங்குள்ளவர்களை வாள்களைக் காட்டி அச்சுறுத்தி அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் வர்த்தக நிலையத்தினுள் வைக்கப்பட்டிருந்த வியாபாரப் பணம் ஆகியவற்றை அபகரித்துச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் எழுதுமட்டுவாழ் தெற்கில் இடம்பெற்றது.
வர்த்தகரின் வீட்டினுள் புகுந்த நால்வர் வாள்களைக் காட்டி அச்சுறுத்தி வீட்டிலிருந்தோரை ஓரிடத்தில் அமரச் செய்து விட்டு வீடு முழுவதும் தேடுதல் நடாத்தியுள்ளனர். அங்கு ஒன்றும் கிடைக்காததால் பெண்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, காப்பு, தோடு போன்றவற்றை அபகரித்துள்ளனர் .அத்துடன் கடையினுள் புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த வியாபாரப் பணத்தையும் எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

