மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள போக்ரா கிராமத்தில் பஞ்சாயத்து பாடசாலை உள்ளது. இந்த பாடசாலையில் நேற்று காலை சமையல் வேலை செய்யும் பெண் சமையலறைக்கு சென்ற போது அங்கு இரண்டு கட்டுவிரியன் பாம்புகள் ஊர்ந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அங்கு விறகுகளுக்குள் இருந்து மேலும் சில பாம்புகள் வெளியே வரத் தொடங்கியிருக்கின்றன. இதனால், அந்த பெண் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினார்சமையலறையில் பாம்புகள் இருந்த தகவல் பரவியதும் பாடசாலைக்குழந்தைகளும், மற்ற ஊழியர்களும் பீதியடைந்தனர். அவர்கள் அனைவரும் பாடசாலை வளாகத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இதன் பிறகு பாம்பு பிடிப்பவர்களும், வனத்துறையினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து பல மணிநேர தீவிர முயற்சிக்கு பிறகு பாடசாலை சமையலறையில் புகுந்த விஷப்பாம்புகள் பிடிக்கப்பட்டது. மொத்தம் 60 பாம்புகள் இருந்தன.
அதன் பிறகே பாடசாலைக் குழந்தைகளும் மற்றவர்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

