தென் மேற்கு பாகிஸ்தானில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் குறைந்தபட்சம் 128 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
2014-ல் இருந்து அந்நாட்டில் நடந்த மிகக்கோரமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.மாஸ்துங் நகரத்தில் நடந்த இத்தாக்குதலில் உள்ளூர் வேட்பாளரும் இறந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் ஐஎஸ் குழு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
முன்னதாக, பண்ணு நகரத்தில் நடந்த இதே போன்றதொரு தேர்தல் பொதுக்கூட்டத்தில் நடந்த குண்டு தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் வரும் ஜூலை 25 அன்று பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இத்தாக்குதல்கள் நடந்துள்ளன.

