Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக பிரான்­ஸில் எதிர்ப்பு

July 13, 2018
in News, Politics, World
0

முன்­னாள் இராஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக பிரான்­ஸில் எதிர்ப்பு நட­வ­டிக்கை இடம்­பெற்­ற­தா­கக் கொழும்பு ஊட­கம் ஒன்று தக­வல் வெளி­யிட்­டுள்­ளது.

விடு­த­லைப் புலி­கள் மீண்­டும் வர­வேண்­டும் என்று விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் யாழ்ப்­பா­ணத்­தில் இரு வாரங்­க­ளுக்கு முன்­னர் கூறி­யி­ருந்­தார்.

அதற்கு எதிர்ப்­புத் தெரி­விக்­கும் வகை­யில் பிரான்­ஸில் வாழும் இலங்­கை­யர்­கள் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.பிரான்­ஸில் உள்ள இலங்­கைத் தூத­ர­கத்­துக்கு முன்­பாக இந்த ஆர்ப்­பாட்­டம் சில நாள்­க­ளுக்கு முன்­னர் இடம்­பெற்­றுள்­ளது.

ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளைச் சந்­திக்­கச் சென்ற பிரான்ஸ்க்­கான இலங்கை தூதர் புத்தி பே அத்­தா­வுத, ஆர்ப்­பாட்­டத்­துக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

எந்­த­வொரு இலங்­கை­ய­ருக்­கும் விடு­த­லைப் புலி­கள் மீண்­டும் தலை­தூக்­கு­வ­தனை விரும்­பு­வ­தில்லை என­வும், அதற்கு ஒரு போதும், ஆத­ரவு வழங்­கு­வ­தில்லை என­வும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

ஆர்ப்­பாட்­டத்­தின் போது தலைமை அமைச்சர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வி­டம் சமர்­பிக்­கு­மாறு மனு ஒன்­றும் தூத­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்­டதுஎன்று தகவலில் கூறப்பட்டுள்ளது.

Previous Post

தாய்லாந்து பிரதமர் – எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு

Next Post

மாணவி உயிரிழந்தமை குறித்து கண்டனங்கள்

Next Post

மாணவி உயிரிழந்தமை குறித்து கண்டனங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures