இரத்தினபுரியில் பொலிஸ் அதிகாரியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேரரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
அவரை நேற்று இரத்தினபுரி நீதிமன்றில் முற்படுத்திய போது நீதிவான் சாலிய சந்தன அபேவர்த்தன இந்த உத்தரவைப் பிறப்பித்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.
கழுத்துநெரித்து கொலை செய்தமை மற்றும் விசாரணைக்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இவர் கைதுசெய்யப்பட்டார்.

