வடக்கிலுள்ள வீடுகளில் ஆகக்குறைந்தது ஒரு குடும்ப உறவினராவது யுத்தத்தில் இறந்துளனாh.; யாழ் மக்களின் முக்கிய பிரச்சனைகளை மறந்து மீண்டும் மோதலுக்குள் அம்மக்களை தள்ளிவிடுவது மிகவும் எளிதான காரியமாகும்.
இதனால் அங்குள்ளவர்களுக்கும் தேவையற்ற பிரச்சனையை ஏற்படுத்தி மீண்டும் அந்த மக்களின் உள்ளங்களை வேதனைப்படுத்துவதற்கும் நம்பிக்கை அற்ற நிலையை ஏற்படுத்துதல் மோதல்களை ஏற்படுத்துவது மிகவும் எளிதாகும்.
இவ்வாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
யாழ்மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள உத்தியோகபூர்;வ ஜனாதிபதி மக்கள் சேவை வேலைத்திட்டம் தொடர்பாக அமைச்சின் அதிகாரிகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது அங்கு அமைச்சர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிடார்.
யாழ்ப்பாணப்பிரதேசம் மிக முக்கிய அணுகுமுறையை கொண்ட பகுதியாகும்.30 வருடகால பிரச்சனை அங்கு தேங்கிக்கிடக்கின்றது. எம்மால் இந்த மக்களின் பிரச்சனைகளை மறந்து மீண்டும் மோதல்களுக்குள் தள்ளுவது மிகவும் லேசான காரியமாகும். அதேபோன்று அங்கிருப்பவர்களுக்கும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி மீண்டும் அவர்கள் உள்ளங்களை வேதனைக்குள்ளாக்கி மோதல்களை உருவாக்குவது மிகவும் எளிதான காரியமாகும். இன்று நாம் செய்யவேண்டியது அதனை அல்ல .இன்று நாம் செய்யவேண்டியது கலந்துரையாடல் மூலம் பொதுமக்களின் பிரச்சனைகளை புரிந்துகொண்டு தீர்வுகாண்பதே ஆகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் , யாழ்ப்பாணத்தில் பல பிரச்சனைகள் உண்டு. அந்தப்பிரதேசம் யுத்தம் நிலவிய பிரதேசமாகும். அரசாங்கத்தினால் வழங்கப்படும் உரிய சட்டஆவணங்கள் யாழ்ப்பாணத்தில் வாழும் பெரும்பாலனவர்களிடமில்லை.இவ்வாறான மக்களே அங்கு இன்று வாழுகின்றனர்.
சிலவேளைகளில் இந்த நாட்டு பிரஜைகள் என்ற ரீதியில் கிடைக்கவேண்டிய பல அவர்களுக்கு கிடைக்காமல் இருக்கலாம். வாழ்நாளில் மூக்குகண்ணாடியை பயன்படுத்தாத தாய்மாரும் தந்தையரும் இருக்ககூடும். தமது கணவர் பிள்ளைகள் சகோதரர்கள் ஆகியோர் வரும்வரையில் காத்துக்கொண்டிருப்போரும் பலர் அங்கு இருக்கின்றனர். இதேபோன்று விதவைகளும் பெரும் எண்ணிக்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருக்கின்றனர். பெண்களை தலைமைத்துவமாகக்கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கைய 30ஆயிரம் ஆகும்.
இது சமூக மற்றும் பொருளாதார பிரச்சனையாகும் இதன் காரணமாக அரசாங்கம் என்ற ரீதியில் யாழ்ப்;பாண மாவட்டத்திலுள்ள மக்களை நாம் மிகவும் முக்கியமாக கவனத்தில்கொள்ள வேண்டும்.
அவர்களுக்கும் கனவுகள் பல இருக்கககூடும்.. இதனை நாம் புரிந்துகொள்ளவேண்டு;ம். பிறப்புச்சான்றிதழ் அடையாள அட்டை இல்லாதோர் விசேடமாக தமது பிள்ளைகள் திருமணம் முடித்திருந்த போதிலும் திருமணம் முடிக்காத பிள்ளைகளின் தாய் தந்தையரும் குடும்ப சுமையுடன் இந்த பிரதேசத்தில் இருந்து வருகின்றனர். சிலருக்கு சட்டரீதியிலான தன்மை எதுவும் இல்லை. தமக்கென்று வீடு காணி இல்லாதவர்கள் ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உத்தியோகபூர்;வ நடமாடும் சேவை நடத்தப்பட்டவேளையில் அங்கு கூட்டம் நடைபெற்ற பின்னர் மண்டபத்திலிருந்தவர்கள் மத்தியில் வீட்டு அங்கத்தவர்கள் யுத்தத்தினால் உயிரிழந்திருப்பார்களாயின் கையை உயர்த்தி அதனை வெளிப்படுத்துமாறு நான் கேட்டுக்கொண்டேன். அப்பொழுது அந்த மண்டபத்திலிருந்து அனைவரும் ஒருமித்து கையை உயர்த்தினர்.
இதேபோன்று உறவினர்கள் யுத்தத்தில் இறக்காதவர்கள் இருந்தால் கையை உயர்த்துமாறு கேட்டபோது எவருமே கையை உயர்த்தவில்லை என்றும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். ‘வடக்கில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஆகக்குறைந்தது ஒரு உறவினராவது யுத்தத்தினால் இறந்துள்ளனர். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இதனை நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். இவர்களது. தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் தீர்வைப்பெற்றுக்கொடுப்பது கடமையும் பொறுப்புமாகும்;. அதுமாத்திரமன்றி இது ஒரு புண்ணிய செயலாகும் என்றே நான் கருதுகின்றேன்.என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த பேச்சுவார்த்தையில் உள்நாட்டு அலுவல்கள் பிரதியமைச்சர் ஜே.சி. அலவத்துவல , பாராளுமுன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரத்ன ,வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.ரி.;கொடிகார மற்றும் திணைக்களங்களின் முக்கியஸ்தர்கள் முப்படையை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் யாழ்மாவட்ட செயலாளர் , யாழ் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
