Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்துக்கு தயார் !

July 9, 2018
in News, Politics, World
0

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போரட்டத்தை அறிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வார காலத்தில் இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த பதினாறு மீனவர்களை் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களது மூன்று விசைபடகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஸ்வரம் விசைபடகு மீனவர்கள் இன்று இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் ஆலோசனைக்கூட்டமொன்றை நடத்தியதுடன் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபட போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியும், அண்மையில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் மீது புதிய வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தை அமல்படுத்த இலங்கை அரசு முயற்சித்து வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக படகுகளுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும் மற்றும் டீசலின் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும் ஆகிய ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆகும் பட்சத்தில் ராமநாதபுரம் ,புதுக்கோட்டை,தூத்துக்குடி,தஞ்சை வேதாரணயம் உள்ளிட்ட ஜந்துமாவட்ட மீனவர்கள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த வுள்ளதாக மீனவ அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் சுமார் 850 க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகள்; கரையில் நிறுத்தப்பட்டுள்ளதுடன் சுமார் 10 ஆயிரம் மீனவர்களும் 5 ஆயிரம் கடற்றொழிலாளர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக எமது இராமேஸ்வரம் செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 7 பேர் கடந்த பெப்ரவரி மாதம் 8 ஆம் தலைமன்னாரில் கைது செய்யப்படடனர்.

எனினும் பெப்ரவரி மாதம் ஆரம்ப பகுதி முதல் ஜூலை மாதம் ஆரம்ப பகுதி வரையான காலப்பகுதியில் இந்திய மீனவர்கள் இலங்கை எல்பை பகுதியில் மீன் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்காமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாட்டின் கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்களின் ட்ரோலர் படகொன்றும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை கடந்த 5 ஆம் திகதி 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் இழுவைப்படகு மீன்பிடி முறையை தடை செய்யும் சட்டமூலம் கடந்த வருடம் ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைய, இலங்கை கடற்பரப்பில் இழுவைப்படகு மீன்பிடியில் ஈடுபட்டால் இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது தண்டப்பணம் செலுத்தப்படல் வேண்டும்.

Previous Post

விஜ­ய­கலா என்ற பெண் புலி நினைத்­துக்­கொண்­டி­ ருக்­கின்­றார், சிங்­க­ள­வர்­கள் நித்­தி­ரை­யில் இல்லை

Next Post

துப்பாக்கி ரவைகளுடன் பெண் கைது

Next Post

துப்பாக்கி ரவைகளுடன் பெண் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026
யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

July 23, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது | ரவிகரன்

July 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures