ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தெரிவாகும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதே தனது பிரதான நோக்கம் எனவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தான் ஒரு போதும் வெளியே செல்லப் போவதில்லையெனவும் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அரசாங்கத்திலிருந்து பதவி விலகிய 15 பேரும் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும், இதற்காக தேவைப்படின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணையவும் தயார் என தெரிவித்துள்ள நிலையில் அக்குழுவில் இருக்கும் தயாசிறி ஜயசேகர மாத்திரம் இவ்வாறு அறிவித்துள்ளது.
அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவுடன் 16 பேர் கொண்ட குழு சந்திப்பை மேற்கொண்ட போதும் தயாசிறி எம்.பி. அதில் கலந்துகொள்ளவில்லை. இதேவேளை, கடந்த ஸ்ரீ ல.சு.க.யின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
