சௌதி அரேபியாவில் பெண் தொகுப்பாளர் ஒருவர் ’அநாகரீகமாக’ ஆடை அணிந்தது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சௌதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடை குறித்து அவர் செய்தி வழங்கி கொண்டிருக்கும்போது, ’அநாகரீகமான’ ஆடை அணிந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஷிர்ரீன் அல்-ரிஃபாய் செய்தி வழங்கிக் கொண்டிருக்கும்போது, அவரது ஹிஜாப் காற்றில் பறக்க, அவர் உள்ளே அணிந்திருக்கும் ஆடை வெளியில் தெரிந்தது.
அந்த காணொளி இணையத்தில் வேகமாக பரவியதையடுத்து விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என அல் ஆன் தொலைக்காட்சியில் பணிபுரியம் ஷிர்ரீன் விளக்கம் அளித்துள்ளார்.

