கிளிநொச்சியில், சிறுத்தையொன்றை கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை, கைது செய்யுமாறு, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம், பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை (21) சிறுத்தையொன்றை கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை, சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட சிறுத்தையை கொலை செய்வது போன்ற புகைப்படங்களை ஆதாரமாக கொண்டு, கைது செய்யுமாறு,மாவட்ட நீதி மன்றம் வெள்ளிக்கிழமை 22 இந்த உத்தரவை பிறப்பித்தது.
இந்த புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு, நீதிமன்றத்தில் வன ஜீவராசிகள் திணைக்களத்தால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு. விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது, இறுவெட்டு மூலம் சாட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களை ஆதாரமாகக்கொண்டு, அனைவரையும் கைது செய்யுமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

