தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதைப் போன்று அவர்களின் உற்பத்திகளுக்காக சந்தைகளையும் நியாய விலைகளையும் வழங்க நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்
தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் திட்ட முறைமையை அறிமுகப்படுத்தி தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திக்கான சிறந்த சந்தை வாய்ப்பையும் நியாயமான விலையையும் பெற்றுக்கொடுக்கவும் அந்த உற்பத்திகள் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படுமானால் அவற்றை தவிர்ப்பதற்கும் குறித்த அனைத்து நிறுவனங்களும் இணைந்த நிகழ்ச்சித் திட்டமொன்று அவசியமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நேற்று (22) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ‘என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா’ கடன் திட்ட முறைமையை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு ஜனாதிபதி உரையாற்றினார்.
தேசிய கைத்தொழிற்துறையை கட்டியெழுப்புவதன் மூலமே உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகள் சுய சக்தியில் எழுந்திருப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து நவீன தொழில்நுட்ப அறிவு மற்றும் ஆலோசனைகள் அவசியம் என்றபோதும் தேசிய தொழில் முயற்சியாளர்களிடமுள்ள பலம் மற்றும் அனுபவம் தொடர்பில் நம்பிக்கை கொளள் வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி ,தொழில் முயற்சியாளர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கக்கூடிய மிகப்பெரும் உதவி அவர்களுக்கு தேவையான நிதி மற்றும் நிதிசாராத வசதிகளை செய்துகொடுப்பதாகும் என்றும் தெரிவித்தார்.
அரச வங்கிகள் இலாபமீட்டுகின்ற வகையிலும் சேவைகளை வழங்கும் நோக்குடனும் செயற்பட வேண்டியதன் அவசியத்தை விளக்கிய ஜனாதிபதி அரச வங்கிகள் பெற்றுக்கொள்ளும் எல்லையற்ற இலாபத்தில் நூற்றுக்கு ஐம்பது வீதம் வர்த்தக கொடுக்கல் வாங்கல்களாகவும் ஐம்பது வீதம் சேவைகளை வழங்கும் வகையிலும் இருக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.
தொழில் முயற்சியாளர்களுக்காக மேற்கொள்ளப்படுகின்ற இந்த முதலீடு தொடர்பில் தொடர்ச்சியாக பின் தொடரல்களை மேற்கொண்டு அவர்களுக்கு தேவையான அறிவு மற்றும் வழிகாட்டல்களை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கினார்.
இலங்கையர்களிடமுள்ள தொழில் முயற்சி திறமைகளை பயன்படுத்தி தொழில் முயற்சி சுவர்க்கமாக மீண்டும் நாட்டை கட்டியெழுப்புவதற்கு 2018 வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் ‘என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா’ நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் வட்டி நிவாரணத்துடன் பல்வேறு கடன் முன்மொழிவு முறைமைகள் இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் அரச மற்றும் தனியார் வங்கிகள்இ சர்வதேச நிதியுதவி நிறுவனங்கள் மற்றும் ஏனைய பங்கேற்பு நிறுவனங்களுடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும் இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கு தேவையான ஆலோசனைகளை நிதியமைச்சினால் குறித்த வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன்இ அதற்கேற்ப இந்த வங்கிகளினால் குறித்த கடன் வசதிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
‘என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா’ நிகழ்ச்சித் திட்டம் 16 முன்மொழிவு முறைமைகளை கொண்டுள்ளதுடன்இ 11 வட்டி நிவாரண கடன் முன்மொழிவு முறைமைகளையும் வெளிநாட்டு கடன் உதவி முறைமையில் நடைமுறைப்படுத்தப்படும் 03 கடன் முன்மொழிவு முறைமைகளையும் 02 நிதி மற்றும் நிதிசாரா வசதிகளை வழங்கும் நிகழ்ச்சித் திட்டங்களையும் உள்ளடக்கியுள்ளது.
இந்த நிவாரண கடன் முன்மொழிவு முறைமைக்கு 2018ஆம் ஆண்டு வட்டி நிவாரணம் வழங்குவதற்காக மட்டும் அரசாங்கத்தினால் 5,250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தில் சுமார் 60,000 மில்லியன் ரூபா மூலதனத்தை மேற்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் மூலம் சுமார் 50,000 புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடன் வசதிகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கஇ நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அமைச்சர்களும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

