இலங்கையில் அரிசி தரம் குறித்து மேற்கொள்ளும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், 2023ஆம் ஆண்டு வரையுள்ள ஐந்து வருட காலத்திற்கு விவசாய அமைச்சுடன் இணைந்து இந்த நிலையம் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும்.
இதுவிடயம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி மெத்திவ் மோரல் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.எம்.டபிள்யு.வீரகோனுக்கும் இடையில் அண்மையில் ஏற்படுத்தப்பட்டது.

