மக்கள் எதிர்கொள்ளும் நாளாந்த பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் சமூக பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்இ நாட்டின் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் சமூக பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் எதிர்கொள்ளும் நாளாந்த பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே இவை ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் ஆலோசனைப் பிரிவொன்று நிறுவப்பட்டுள்ளது. நாளாந்தம் இடம்பெறும் மோட்டார் வாகன விபத்துக்களில் சராசரியாக எட்டுடீபர் உயிழக்கின்றனர். பெரும்பாலும் மோட்டார் சைக்கிள் வீதி விபத்துக்கள் மூலமே இந்த உயிரிழப்புக்கள் இடம்பெறுகின்றன என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் கூறினார்.

