பெருந் தோட்டத்துறையைச் சேர்ந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு காணிகள் வழங்கப்படும்.அத்தோடு அதற்கான உறுதிப் பத்திரமும் வழங்கப்படும் என்று அரச தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நளின் டி ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இந்த வேலைத்திட்டத்தின் முதல்கட்டம் தொடர்பான வைபவம் அடுத்த மாதம் முதலாம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நளின் டி ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அமைச்சர் அண்மையில் கிளிநொச்சியில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சிறுத்தை தொடர்பான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

