பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரரை பிணையில் விடுதலை செய்ய ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவருக்கு பிணை வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அவர் வௌிநாடு செல்வதற்கும் நீதிமன்று தடை விதித்துள்ளது.

