பாகிஸ்தானை சேர்ந்த இரு பெண் விமானிகள் மலையை கடந்து சாதனை புரிந்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டில் பெண் விமான ஓட்டிகள் தற்போது பணி அமர்த்தப்பட்டு வருகின்றனர். அதில் கேப்டன் மரியம் மசூத் மற்றும் ஷுமைலா மஸார் ஆகியோரும் அடங்குவார்கள். இதுவரை பாகிஸ்தான் விமானத்தில் ஆண்கள் மட்டுமே விமானத்தை செலுத்தி வந்தனர். பெண் விமானிகள் அவர்களுக்கு உதவும் பணியை மட்டுமே செய்து வந்தனர்.பாகிஸ்தான் நாட்டு விமான வழித்தடங்களில் மிகவும் கடினமான தடம் என கூறப்படுவது இஸ்லாமாபாத் முதல் கில்கித் வரையிலான பாதை ஆகும். இந்த பாதை மிகவும் குறுகலாகவும், மலை சிகரங்களுக்கு நடுவிலும் அமைந்துள்ளது. எப்போதும் மூடுபனியுடனும் பனிப்பொழிவுடனும் இந்த பாதை காணப்படும்,
பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் என்னும் பாக் அரசு விமான நிறுவனத்தை சேர்ந்த விமானத்தை இந்த இஸ்லாமாபாத் – கில்கிட் தடத்தில் இரு பெண் விமானிகளும் ஓட்டிச் சென்று சாதனை புரிந்துள்ளனர். இது பாகிஸ்தான் நாட்டில் சரித்திர சாதனையாக போற்றப்படுகிறது. கேப்ட்ன் மரியம் மசூத் மற்றும் ஷுமலா மசூர் ஆகியோரை பாராட்டியும் வாழ்த்தியும் பலர் டிவிட்டரில் பதிவு இட்டுள்ளனர்.

