சிறைத் தண்டனை அனுபவிக்கும் ஏனைய 15 பிக்குகளுடன் ஞானசார தேரரை ஒப்பிடுவது அநீதியானது என முன்னாள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
சிறையிலுள்ள ஏனைய 15 பிக்குகளுக்கும் ஆதரவாக எந்தவொரு மேன் முறையீட்டு மனுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. ஆனால், ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு மனு முன்வைக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு மனு முன்வைக்கப்பட்ட ஒருவருக்கு சிறையில் தனது காவியுடையை கலையத் தேவையில்லை.
அத்துடன், சிறையிலுள்ள 15 பேருக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பாரிய குற்றச்சாட்டுக்கள் எதுவும் ஞானசார தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட வில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஞானசார தேரர் சார்பாக முன்வைக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு விசாரணைக்கு சட்ட மா அதிபரோ, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளோ வருகை தருவது அவசியமற்றது. மஜிஸ்ட்ரேட் நீதிபதியின் விருப்பத்தின் பேரில் தீர்ப்பு வழங்கப்படலாம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

