Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்கியோ விலகியோ செயற்படப்போவதில்லை

June 21, 2018
in News, Politics, World
0

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்கா வெளியேறியமையால் இலங்கை மீதான சர்வதேசத்தின் அழுத்தம் குறையும்.

அமெரிக்கா வெளியேறினாலும், நாம் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்கியோ விலகியோ செயற்படப்போவதில்லை என்பதையும் நாம் உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
இவ்வாறு சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுபெரமுன கட்சி அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்கு தள்ள திட்டமிட்ட சதி முயற்சிகளை ஆரம்பித்துள்ளது. இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகிறதென அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.
அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்த அமெரிக்கா விலகியது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சரவைப் பேச்சாளருமான டொக்கடா ராஜித சேனாரத்ன சர்வதேச மட்டத்திலிருந்து இலங்கைக்கு விடுக்கப்பட்ட பாரிய அழுத்தமொன்று குறைவடையும். இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு அமெரிக்கா முதலில் எதிர்ப்பினை வெளியிட்டது. எனினும், கடந்தகாலங்களில் இலங்கை ஐ.நா.வில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதையடுத்து, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்காவே கொண்டுவந்தது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நூட்டில் உள்ள சட்டதிட்டங்களுக்கு அமையவே சங்கைக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
.
அன்று S.W.R.D. பண்டாரநாயக்கவை படுகொலை செய்த மதகுரு மரணதண்டனையை அனுபவித்தார். முன்னாள் அமைச்சர் எஸ்பி.திஸாநாயக்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இரண்டு வருடங்கள் சிறை சென்றார். இவை யாவும் நீதிமன்றத்தின் தீர்ப்புகள். யாரும் மாற்ற முடியாது.
சந்தையில் பொருட்களின் விலையேற்றம் பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் இலங்கையின் வரலாற்றில் பொருட்களின் விலை ஏறி இறங்குவது வழக்கம். 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் எரிபொருள், சமையல் எரிவாயு, மருந்து வகைகள் போன்றவற்றின் விலை மட்டங்கள் இன்னமும் குறைவாகவே காணப்படுகின்றன என்று அமைச்சர் கூறினார்.

Previous Post

சயிற்றம் நிறுவனம் இயங்கிய போதிலும் ஆட்சேபனைகள் தலைதூக்கவில்லை.

Next Post

அடுத்த கூட்டத்தில் 16 பேரும் பங்கேற்க தீர்மானம்

Next Post

அடுத்த கூட்டத்தில் 16 பேரும் பங்கேற்க தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures