பிணைமுறி ஆணைக்குழு அறிக்கையின் ஏனைய பகுதிகளையும் முழுமையாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்குக் காத்திருப்பதாக ஜனாதிபதி செயலாளர் பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
பிணைமுறி மோசடியுடன் சம்பந்தப்பட்ட பேர்ப்பச்சுவல் ட்ரெஷரி நிறுவனத்திடமிருந்து 118 பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.
கடந்த 5 ஆம் திகதி பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி அறிக்கையுடன் தொடர்புள்ள சீ 350 முதல் சீ 360 வரையான கோப்புகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

