ஹொரணை வைத்தியசாலையில் 470 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட செலவில் மேற்கொள்ளப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்களை அண்மையில் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன திறந்து வைத்தார்.
வைத்தியர்களுக்கு மூன்று மாடிகளைக் கொண்ட விடுதிக் கட்டிடம், சட்ட வைத்திய கட்டிடத் தொகுதி, இரத்த வங்கி, ஆஸ்பத்திரி நிர்வாகக் கட்டிடத் தொகுதி, ஆய்வுகூடம், வாகனத் தரிப்பிடம், புதிய தொழில்நுட்பத்திலான சி.ரி.ஸ்கேன் இயந்திரம் உள்ளிட்ட பல திட்டங்கள் மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டன.
