பெசெஸ்ட் மாணிக்கக்கல் மற்றும் ஆபரணங்கள் கண்காட்சி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதில் இலங்கையை சேர்ந்த முன்னணி மாணிக்கக்கல் வர்த்தகர்களின் காட்சிக்கூடங்கள் அமைக்கப்படவுள்ளன.
இலங்கையின் மாணிக்கக்கல் ஏற்றுமதியாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள்.

