அலரி மாளிகையில் நேற்று (18) பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பலரும் கலந்துகொள்ளாமையையிட்டு ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கவலை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஞானசார தேரரின் கைது தொடர்பில் கலந்துரையாட இருந்த போதிலும் குறித்த துறையுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் வருகை தராததினாலேயே இவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

