கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏனைய கைதிகளுக்கான சட்ட விதிமுறைகளே, கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் பின்பற்றப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
சிறைத்தண்டனை விதிக்கப்படடுள்ள ஞானசார தேரர் வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று மாலை சிறைவைக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஏனைய கைதிகளுக்கான ஆடையையே அவருக்கும் அணிய நேரிடும் என்றும், விசேட பாதுகாப்பு அவசியமாயின் அதனை வழங்க முடியும் என்றும் சிறைச்சாலைகள் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

