அமெரிக்காவில் நாய் ஒன்றை சுமார் 7 அடி நீளம் கொண்ட கொடூர மிருகம் விரட்டியது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள காடு ஒன்றில், மரத்தின் ஓரத்தில் வித்தியாசமான மிருகம் ஒன்று நின்றுள்ளது.
இதைக் கண்ட நாய் ஒன்று, அதை பார்த்து கத்தியுள்ளது. தொடர்ந்து நாய் கத்தியதால் அந்த மிருகம் திடீரென்று அசுர வேகத்தில் நாயை தாக்க வந்தது.
அப்போது நாயின் உரிமையாளர் சத்தம் போட்டு மிரட்டியதால், அது மீண்டும் ஓடியுள்ளது.
இது தொடர்பான காட்சியை அந்த நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.
தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இது கடந்த 2015-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ எனவும் ஆனால் சமீபத்தில் தான் அந்த நபர் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது
மேலும் பார்ப்பதற்கு அந்த மிருகம் பாதி மனிதன், பாதி நாய் உருவம் கொண்டு இருப்பதாக இணையவாசிகள் கூறியுள்ளனர்.

