காணாமல்போனோர் அலுவலகத்தின் பொது மக்களுடனான சந்திப்பு திருகோணமலை மாவட்டத்தில் நேற்று இடம்பெற்றது.
திருகோணமலை உவர் மலை இந்து கலாசார மண்டபத்தில் இடம் பெற்ற இந்த சந்திப்பிற்கு முன்னர் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இதேவேளை இன்றைய பொதுமக்களுடனான சந்திப்பில் காணாமற்போனோரின் அதாவது மூவினத்தைச்சேர்ந்த சுமார் 800 குடும்பங்களைச்சேர்ந்தோர் கலந்துகொண்டனர்.