ஆப்கானிஸ்தானின் டருலாமான் பகுதியில் கிராமப்புற புனரமைப்பு மற்றும் வளர்ச்சி துறையின் அமைச்சகம் உள்ளது. இந்த அமைச்சக கட்டிடத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக கல்வித்துறை கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 15 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.