சீனாவில் 5 வது மாடியிலிருந்து விழுந்த சிறுவனை, முதியவர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூனான் மாகாணத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பின் 5-வது மாடியில் இருந்து தவறிவிழுந்தான்.
ஜன்னல் இடைவெளியில் அவன் தலை சிக்கிக் கொண்டதால் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அச்சிறுவன் உதவிகோரி அலறினான். இதனைக்கேட்ட அங்கிருந்த ஜியாங்-சின் என்ற முதியவர் சற்றும் யோசிக்காமல், சிறுவனை காப்பாற்ற முற்பட்டார்.
சமயோஜிதமாக யோசித்து ஸ்பைடர்மேன் போல் மாடிச்சுவர்களில் ஏறிச்சென்று அந்த சிறுவனை மீட்டார்.