வடமாகாண வைத்தியசாலைகளின் வெளிநோயளர் பிரிவில் இருந்து வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ஞா . குணசீலன் அவர்களிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளினை தொடர்ந்து முல்லைத்தீவின் மாவட்ட வைத்தியசாலையின் வெளிநேயாளர் பிரிவிற்கு சாதாரண நோயாளர்போல் சென்ற வடமாகாண சுகாதார அமைச்சர் நோயாளர்களின் இருக்கையில் அமர்ந்தவாறு அங்கு நோயாளர்களிற்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் சம்பந்தமாக அவதானித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் தொடர்ந்து முறைகேடுகள் இடம்பெறுவதாகவும் நோயாளர்கள் சிரமங்களுக்கு உள்ளாக்குவதாகவும் முறைப்பாடுகள் தொடர்சியாக வரும் நிலையில் வடமாகாண சுகாதார் அமைச்சர் சாதாரண நோயாளிபோல் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டதோடு முல்லைத்தீவில் இயங்கும் தனியார் மருந்தகங்களிலும் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பாகவும் இதே பாணியில் சென்று அவதானிப்புகளை மேற்கொண்டார்.