ஊடகச் சுதந்திரம் குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார்.
டி.என்.எல் ஒளிபரப்பு நிலையம் குறித்து இன்று பாராளுமன்றத்தில், பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் அதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
டி.என்.எல் நிலையத்தின் பொல்கஹவெ ஒளிபரப்பு கோபுரத்திற்கு சீல் வைத்தமை ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆட்சியின் போது ஊடகத்திற்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் குறித்து மக்கள் இன்னும் மறந்து விடவில்லை என்றும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண
பொல்கஹவெல ஒளிபரப்பு நிலையத்தை எதுவித நிபந்தனையும் இன்றி மீண்டும் இயங்கச் செய்ய வேண்டும.
காணி அபிவிருத்தி மற்றும் பாராளுமன்ற மறுநீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க:
இதுவிடயம் தொடர்பில் எதிர்காலத்தில் நன்கு ஆராய்ந்து பதில் அளிக்கப்படும்.