ஸ்ரீமத் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக (விசேட ஏற்பாடு) திருத்தச் சட்டமூலம், நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
உயர்க் கல்வி மற்றும் கலாசார விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால், இன்று இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
தெற்காசியத் தொழில்நுட்ப மற்றும் மருத்துவ நிறுவனமான ‘சைட்டம்’ என்ற தனியார் மருத்துவக் கல்லூரியில் பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களை, 1981ஆம் ஆண் 68ஆம் இலக்க சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இணைத்துக் கொள்வதற்கான தேசியக் கொள்கைகளைத் தயாரித்தல் மற்றும் அதனோடு இணைந்தோ அல்லது ஏற்பாடுகளைத் தயாரிப்பதற்காக, இந்த திருத்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.