வாக்காளர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
“உண்மையான ஜனநாயகம் வாக்குரிமையில் தங்கியுள்ளது” என்ற தொனிப் பொருளில் நடத்தப்பட்ட ஊர்வலம் யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஆரம்பமாகி மருத்துவமனை வீதியூடாக பிரதேச செயலகத்தை அடைந்தது.“சாதி ரீதியாகவோ மத ரீதியாகவோ உந்தப்பட்டு வாக்களிக்க மாட்டேன்”, “தமது அடிப்படை உரிமைகளை வழங்கும் சனநாயகத்திற்கு வலுச்சேர்க்க வாக்களிப்பீர்” என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைளை ஏந்தியவாறு ஊர்வலம் நடத்தப்பட்டது.