ஐயாயிரம் ரூபா தாள்களை சட்டவிரோதமாக சீனாவுக்கு கடத்தமுயன்ற பெண்ணொருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பெண் 35 வயதுடையவராவார்.
சீனாவுக்கு 255 ஐயாயிரம் ரூபா தாள்களை சட்டவிரோதமாக சீனாவுக்கு கடத்திச்செல்லும் போதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படவிருந்த பணத்தின் பெறுமதி சுமார் 12 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.