நேற்று செவ்வாய்க்கிழமை செந்தனியில் SAMU அவசர உதவி மருத்துவ சேவையின் மருத்துவர் ஒருவரும் அவரின் உதவியாளர்களும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
குறித்த 93 ஆம் இலக்க வட்டார SAMU சேவைகளின் மருத்துவர், நோயாளர்காவு வண்டியில் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்த
போது, அதி வேகமாக அவர்களை உரசிக்கொண்டு மகிழுந்து ஒன்று வந்து நின்றுள்ளது. நோயாளர் காவு வண்டியின் சாரதியிடம் யார் இவர்கள், ஏன் இப்படி மகிழுந்தை செலுத்துகிறார்கள் என மருத்துவர் கேட்டுள்ளார். அப்போது எதிரே வந்த மகிழுந்தில் இருந்து சுத்தியல் போன்ற ஆயுதங்களுடன் இருவர் கீழே இறங்கியுள்ளனர்.
இருவரும் மருத்துவரையும் அவரின் உதவியாளர்களையும், சாரதியையும் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை குறித்த இரு தாக்குதலாளியும் BAC அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.