Wednesday, September 17, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரதிச் சபாநாயகர் பதவியும ஐக்கிய தேசியக் கட்சி வசம்!!

June 6, 2018
in News, Politics, World
0

நாடா­ளு­மன்­றத்­தின் புதிய பிரதிச் சபா­நாய­கராக ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மொனரா­கலை மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப் பி­ன­ரான ஆனந்தகுமா­ர­சிறி தெரிவு செய்யப் பட்­டார்.

தெரி­வுக்­காக நடத்­தப்­பட்ட இர­க­சிய வாக்­கெ டுப்பில் ஆனந்த குமா­ர­சி­றிக்கு ஆத­ர­வாக 97 வாக்கு­க­ளும், எதிர்த்­துப் போட்­டி­யிட்ட சிறி லங்கா சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர் சுதர் ஷினி பெர்னாண்­டோ­புள்­ளேக்கு ஆத­ர­வாக 53 வாக் கு­களும் அளிக்­கப்­பட்­டன. ஒரு வாக்கு நிராக ரிக்­கப்­பட்­டது.

கூட்­ட­ர­சில் அங்­கம் வகிக்­கும் முதன்மை இரு கட்­சி­க­ளான சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­கும், ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­கும் இடையே அண்மைக்­கா­ல­மாக முரண்­பா­டு­கள் ஏற்­பட்­டுள்ள நிலை­யி­லேயே தற்­போது பிரதி சபா­நா­ய­கர் பத­வியை ஐக்­கிய தேசி­யக் கட்சி கைப்­பற்­றி­யுள்­ளது.நாடா­ளு­மன்­றம் நேற்று பிற்­ப­கல் ஒரு மணிக்கு சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய தலை­மை­யில் கூடி­யது. சபா­நா­ய­கர் அறி­விப்பு, பொது­ம­னுத் தாக்­கல், வாய்­மூல விடைக்­கான கேள்வி பதில் சுற்று, 27/2 இன்­கீ­ழான விசேட அறி­விப்பு ஆகி­யன முடி­வ­டைந்த பின்­னர் பிரதி சபா­நா­ய­கர் தெரி­வுக்­கான அழைப்பை சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய விடுத்­தார்.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் சார்­பில் மொன­ரா­கலை மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஆனந்த குமா­ர­சி­றி­யின் பெயரை அந்­தக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் புத்­திக பத்­தி­ரண முன்­மொ­ழிந்­தார்.

பொது எதி­ரணி மற்­றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் 16 பேர் கொண்ட அணி­யின் சார்­பில் சுதர்­ஷினி பெர்­னாண்­டோ­புள்­ளே­யின் பெயரை அந்­தக் கட்­சி­யின் பொரு­ளா­ள­ரான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எஸ்.பி.திஸா­நா­யக்க பிரே­ரித்­தார்.

வெற்­றி­ட­மா­க­வுள்ள பிரதி சபா­நா­ய­கர் பத­விக்கு ஒன்­றுக்கு மேற்­பட்ட உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­கள் பரிந்­து­ரைக்­கப்­ப­டும் பட்­சத்­தில் இர­க­சிய வாக்­கெ­டுப்பு மூலமே தெரிவு இடம்­பெ­ற­வேண்­டும்.

சபைக்கு நடு­வில் வாக்­குப்­பெட்டி வைக்­கப்­பட்டு இர­க­சிய வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. வாக்­குச்­சீட்­டில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் கையொப்­பம் இடம்­பெ­ற­வேண்­டும் என்று சபா­நா­ய­கர் கோரிக்கை விடுத்­தி­ருந்­தா­லும், இது இர­க­சிய வாக்­கெ­டுப்பு என்­ப­தால் அவ­சி­ய­மில்­லை­யென சபை முதல்­வ­ரான அமைச்­சர் லக்ஷ்­மன் கிரி­யெல்ல சுட்­டிக்­காட்­டி­னார்.

இர­க­சிய வாக்­கெ­டுப்பை பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மற்­றும் ஜே.வி.பி. ஆகி­யன புறக்­க­ணித்­தி­ருந்­தன. சபை ஆரம்­ப­மா­கும்­வேளை இந்த இரு கட்­சி­க­ளின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் அவை­யில் இருந்­தா­லும், வாக்­கெ­டுப்பு நேரத்­தில் வெளி­யே­றி­ருந்­த­னர்.

எனி­னும், பிரதி சபா­நா­ய­கர் பத­வி­யா­னது சிறி லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்கு வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்­பதே தமது நிலைப்­பா­டாக உள்­ளது என்று கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரான எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தி­ருந்­தார்.

பிற்­ப­கல் 3 மணி­ய­ள­வில் வாக்­கெ­டுப்பு ஆரம்­ப­மாகி, பிற்­ப­கல் 4.25 மணிக்கு வாக்­கெ­டுப்பு நிறை­வு­பெற்­றது. ஐ.தே.கவின் வேட்­பா­ள­ருக்கு ஆத­ர­வாக 97 வாக்­கு­க­ளும், சு.கவின் வேட்­பா­ள­ருக்கு ஆத­ர­வாக 53 வாக்­கு­க­ளும் அளிக்­கப்­பட்­டன. ஒரு வாக்கு நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

கூடு­தல் வாக்­கு­க­ளைப் பெற்ற ஐ.தே.க. உறுப்­பி­னர் பிரதி சபா­நா­ய­க­ரா­கத் தெரி­வு­செய்­யப்­பட்­டார்.
பிர­த­மர், சபா­நா­ய­கர், முன்­னாள் பிரதி சபா­நா­ய­கர், எதிர்த்­துப் போட்­டி­யிட்ட சுதர்­ஷினி பெர்­னாண்­டோ­புள்ளே ஆகி­யோர் புதிய பிரதி சபா­நா­ய­க­ருக்கு வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக்­கொண்­ட­னர்.

புதிய பிரதி சபா­நா­ய­க­ருக்கு ஆளுங்­கட்சி உறுப்­பி­னர்­கள் அவைக்­குள்­ளேயே கைகொ­டுத்து வாழ்த்­து­மழை பொழிந்­த­னர்.

கூட்­ட­ரசு அமைக்­கப்­ப­டும்­வேளை சபா­நா­ய­கர் பதவி ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­கும், பிரதி சபா­நா­ய­கர் பதவி சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­கும் என்றே இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டி­ருந்த நிலை­யில் பிரதி சபா­நா­ய­கர் பத­வி­யும் ஐ.தே.க. வச­மா­கி­யுள்­ளது.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தி­ருந்த திலங்க சும­தி­பால, பிரதி சபா­நா­ய­கர் பத­வி­யைத் துறந்து, கூட்­ட­ர­சி­லி­ருந்து வெளி­யே­றி­னார்.

ஆளுங்­கட்­சிக்கு மற்­று­மொரு நெருக்­க­டியை வழங்­கும் நோக்­கி­லேயே பிரதி சபா­நா­ய­கர் பத­விக்கு ஒரு­வரை பொது எதி­ரணி பிரே­ரித்­தி­ருந்­தது. ஆளுங்­கட்­சிக்­குள் உள்ள ஒற்­று­மையை பலத்தை பரிட்­சித்­துப் பார்ப்­ப­தற்­கான பொது எதி­ர­ணி­யின் வியூ­க­மா­கவே இது கரு­தப்­பட்­டது.

அதே­வேளை, ஆளுங்­கட்­சி­யின் பிரே­ர­ணை­க­ளுக்கு ஆத­ரவை வழங்­கி­வந்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் இந்த நட­வ­டிக்­கையை விமர்­சித்­தது மட்­டு­மல்­லாது, வாக்­கெ­டுப்­பி­லும் பங்­கேற்­கா­தது குறித்து பல­கோ­ணங்­க­ளில் கருத்­து­கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

Previous Post

முழுமையான அறிக்கை கிடைத்தவுடன் சமர்ப்பிப்பேன்

Next Post

ஐக்கிய தேசியக்கட்சியின் உப தவிசாளராக அமைச்சர் மங்கள

Next Post

ஐக்கிய தேசியக்கட்சியின் உப தவிசாளராக அமைச்சர் மங்கள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures