அமெரிக்காவில் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழர் ஒருவரின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.
பங்கு சந்தை மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக கடந்த 2011ம் ஆண்டு ராஜ் ராஜரட்ணம் என்பவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது.
இந்நிலையில், தம்மீதான பல குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்து ராஜ் ராஜரட்ணம் மேன்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
மென்ஹாட்டானில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்றில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.