தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 6 பேரின் உடல்களுக்கு நாளையே உடற்கூறு ஆய்வு நடக்கும் என்று ஆட்சியர் கூறியுள்ளார்.
தூத்துக்குடி அலுவலகத்தில் விசாரணை ஆணையரின் ஆய்வுக்கு பின்னர் ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி உடற்கூறு ஆய்வு முடிந்த பின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். 2 அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழு 6 பேரின் உடல்களுக்கு உடற்கூறு ஆய்வு நடத்தும்.