நாட்டிலுள்ள அச்சு ஊடகங்கள் குறிப்பாக சிங்கள பத்திரிகைகள் கோட்டாபயவுக்கு பயந்து அவர் தொடர்பான தகவல்களை வெளியிடுவதில்லையென தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
நாட்டிலுள்ள ஊடகங்கள் சத்தியத்தை வெளிப்படுத்த வேண்டும். நான் கோட்டாப ராஜபக்ஷ தொடர்பான வழக்குகள் குறித்து அண்மையில் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த போது இலத்திரனியல் ஊடகங்கள் அதனை வெளியிட்டன.
ஆனால், சிங்கள அச்சு ஊடகங்கள் எதுவும் அதனைப் பிரசுரிக்கவில்லை. கோட்டாப மீதுள்ள அச்சமே இதற்குக் காரணம் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக மத்திய பிரிவை நேற்று (04) ஆரம்பித்து உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் கூறினார்.