Monday, September 22, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிணைமுறி விவகாரம் 12,500 மில்­லி­யன் ரூபா மோசடி !!

June 4, 2018
in News, Politics, World
0
பிணைமுறி விவகாரம் 12,500 மில்­லி­யன் ரூபா மோசடி !!

பிணை­முறி மோச­டி­யு­டன் தொடர்­பு­டைய பேர்­பச்­சு­வல் ட்ரச­ரிஸ் நிறு­வ­னம் 2016ஆம் ஆண்டு ஏப்­ரல் முதல் 2017ஆம் ஆண்டு மார்ச் வரை­யான காலப்­ப­கு­திக்­குள் முறை­கே­டான வகை­யில் 12 ஆயி­ரத்து 500 மில்­லி­யன் ரூபா இலா­ப­மீட்­டியுள்­ள­தால் அது தொடர்­பில் விசா­ரணை நடத்­து­வ­தற்கு இரண்­டா­வது அரச தலை­வர் ஆணைக்­கு­ழுவை நிய­மிக்­கு­மாறு ஊழல் எதிர்ப்­புக்­குழு அரச தலைவரி­டம் நேற்று கோரிக்கை விடுத்­தது.

2015ஆம் ஆண்டு பெப்­ர­வரி முதல் 2016ஆம் ஆண்டு மார்ச் 31 வரை­யான காலப்­ப­கு­திக்­குள் இடம்­பெற்ற மோச­டியை விசா­ரிக்­கும் அதி­கா­ரமே அரச தலை­வ­ரால் நிய­மிக்­கப்­பட்ட முத­லா­வது ஆணைக்­கு­ழு­வுக்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

பிணை­முறி மோச­டி­யின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யா­கக் கரு­தப்­ப­டும் அர்­ஜுன மகேந்­தி­ரன், 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை மத்­திய வங்கி ஆளு­ந­ரா­கப் பத­வி­வ­கித்­துள்­ளார். 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தி­யும் விசா­ரிக்­கப்­ப­ட­வேண்­டும் என்­ப­தற்­கா­கவே புதிய விசா­ரணை ஆணைக்­குழு கோரப்­பட்­டுள்­ளது.ஊழல் எதிர்ப்­புக்­கு­ழு­வின் ஊட­க­வி­ய­லா­ளர் மாநாடு நேற்று முற்­ப­கல் கொழும்­பில் நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே முன்­ன­ணி­யின் ஏற்­பாட்­டா­ளர் வசந்த சம­ர­சிங்க மேற்­கண்­ட­வாறு கோரி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

நாட்­டில் எழுந்­துள்ள பிரச்­சி­னை­கள் தொடர்­பில் எந்­தத் தரப்­பு­ட­னும் நேரில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு நான் தயா­ரா­கவே இருக்­கின்­றேன் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அண்­மை­யில் அறி­வித்­தி­ருந்­தார்.

பிணை­முறி விவ­கா­ரம் தொடர்­பில் அரச தலை­வரை நேரில் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு ஊழல் எதிர்ப்­புக்­குழு தயா­ரா­கவே இருக்­கின்­றது. இதற்­கான நேரத்தை ஒதுக்­கித்­த­ரு­மாறு கோரி அரச தலை­வ­ருக்கு கடி­தம் அனுப்­பி­வைக்­கப்­ப­டும்.

கடி­தத்­தில் நான்கு கார­ணி­கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. பிணை­முறி மோசடி தொடர்­பில் விசா­ரணை நடத்­து­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­ட­ஆ­ணைக்­கு­ழு­வுக்கு 2015ஆம் ஆண்டு பெப்­ர­வரி முதல் 2016ஆம் ஆண்டு மார்ச் 31 வரை­யான காலப்­ப­கு­தியை மட்­டுமே விசா­ரிக்­கும் அதி­கா­ரம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

பிணை­முறி மோச­டி­யால் 2016ஆம் ஆண்டு ஏப்­ரல் முத­லாம் திகதி முதல் செப்­ரெம்­பர் 30ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தி­யில் அலோ­சி­ய­ஸின் நிறு­வ­னம் 6 ஆயி­ரத்து 816 மில்­லி­யன் ரூபா இலா­ப­மீட்­டி­யுள்­ளது.

2016ஆம் ஆண்டு ஏப்­ரல் முத­லாம் திக­தி­மு­தல் 2017ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வரை­யான காலப்­ப­குதி குறித்து விசா­ரிக்க இரண்­டா­வது அரச தலை­வர் ஆணைக்­கு­ழுவை நிய­மிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்­டும்.

பிணை­முறி விசா­ரணை அறிக்­கை­யில் 106 பக்­கங்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. அவற்­றி­லுள்ள விவ­ரங்­களை நாட்­டுக்­குப் பகி­ரங்­கப்­ப­டுத்­த­வேண்­டும்.

பிணை­முறி மோச­டி­யால் 2015ஆம் ஆண்டு பெப்­ர­வரி முதல் 2016ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திக­தி­வரை 11 ஆயி­ரத்து 500 மில்­லி­யன் ரூபா இழப்பு ஏற்­பட்­டுள்­ளது. இழந்த தொகை­யில் பெரும்­ப­குதி ஊழி­யர் சேம­லாப நிதி­யத்­துக்­கு­ரி­ய­தா­கும். அந்­தத் தொகையை மீளப்­பெற அரச தலை­வர் தலை­யீடு செய்­ய­வேண்­டும்.

காசோலை பெற்­றுள்ள 166 பேரின் விவ­ரங்­கள் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும். மேற்­படி கார­ணங்­கள் தொடர்­பில் அரச தலை­வ­ரு­டன் பேச்சு நடத்தி எமது குழு­வின் தேசிய நிறை­வேற்­றுக்­குழு உறுப்­பி­னர்­கள் தயா­ரா­கவே இருக்­கின்­ற­னர். திக­தியை அரச தலை­வர் வழங்­க­வேண்­டும் – என்­றார்.

அதே­வேளை, 2005ஆம் ஆண்­டு­மு­தல் இடம்­பெற்­ற­தா­கக் கூறப்­ப­டும் பிணை­முறி மோசடி தொடர்­பில் விசா­ரிக்க தனி­யா­ன­தொரு ஆணைக்­கு­ழுவை அமைக்­கு­மா­றும் அவர் கோரிக்கை விடுத்­தார்.

Previous Post

செல்­லப் பிரா­ணி­யை­யும் :அழைத்து வந்த அகதிகள்

Next Post

நிறை­வே­றிய தீர்­மா­னங்­க­ளுக்கு என்ன நடந்­தது : சி .தவராசா

Next Post
நிறை­வே­றிய தீர்­மா­னங்­க­ளுக்கு என்ன நடந்­தது : சி .தவராசா

நிறை­வே­றிய தீர்­மா­னங்­க­ளுக்கு என்ன நடந்­தது : சி .தவராசா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures