அரைச் சொகுசு பேருந்து சேவையை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது.
பயணிகளுக்கு ஏற்படும் அசெளகரியங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி. ஹேமச்சந்திர தெரிவித்தார்.
அரை சொகுசு பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கையை விட அதிகமான பயணிகள் ஏற்றப்படுகின்றமை தொடர்பில் தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.

