இன்று முதல் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிக்கவுள்ளதாக மாவட்டங்களுக்கு இடையிலான அகில இலங்கை போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் ஹரிஸ்சந்திர பத்மசிறி தெரிவித்தார்.
எரிபொருள் விலை அதிகரித்தமையினைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தூரத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டணத்தை அதிகரிக்குமாறு தமது உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.