இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து வெளிநாட்டு தூதுவர்கள் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதன்படி, சவூதி அரேபியா,மொசாம்பிக், சுவீடன், பின்லாந்து, மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளின் தூதுவர்களே ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து இவ்வாறு தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது.

