கொட்டாவ பகுதியில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டுள்ளதை தொடர்ந்து களனி வௌி மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் மஹரகம வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தடம்புரண்ட ரயில் பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லையென பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மாலை கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த ரயிலொன்றின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டன.
இதனிடையே, தும்மோதர பகுதியில் புத்தளம் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து லுணுவில வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த மார்க்கம் நீரில் மூழ்கியுள்ளதால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

