இரத்தினபுரி – கலவானைப் பகுதியில் வெள்ளப் பெருக்கில் சிக்கி , பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடியாமல் பரிதவித்துக் கொண்டிருந்த 9 கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட 107 பேர் மீட்கப்பட்டனர்.
கடற்படை மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகளின் துரித செயற்பாட்டால் அவர்கள் பாதிப்பு எதுவும் இல்லாமல் மீட்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட கர்ப்பிணிகள் கலவானை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

