ஆட்சியர் அலுவலகம் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது என டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் நுழைந்து முற்றுகையிட்டனர். பேரணியாக வந்த ஆயிரக்கணக்கானோரை காவல்துறையால் தடுக்க முடியாததால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆட்சியர் அலுவலகம் மீது பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த கல்வீச்சில் ஆட்சியர் அலுவலக கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
ஆட்சியர் அலுவலகம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த போராட்டக்களத்தில் ஈடுபட்டவர்களை போலீஸ் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்துள்ளனர்.
கல்வீச்சு தாக்குதலால் மேலும் பலர் மண்டை உடைந்து காயம் அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்புக்கு தீவைக்கப்பட்டது.

