இரத்தினபுரி – காஹவத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றதாக காஹவத்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கேகாலை நோக்கி சென்ற தனியார் பேருந்தொன்றும், கொடகவெலயில் இருந்து கேகாலைக்கு பயணித்த பேருந்தும் மோதுண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கஹவத்த மற்றும் இரத்தினபுரி மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் நான்கு பேர் கவலைக்கிடமாக உள்ளதாக கஹவத்த மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவின் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

