Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரா­ணு­வத்தைப் பாது­காப்புக்கு அழைக்கும் கோட்டபாய ராஜபக்ச

May 21, 2018
in News, Politics, World
0

வடக்கு -– கிழக்­கில் நல்­லி­ணக்­கம் என்று சொல்­லிக் கொண்டு விடு­த­லைப் புலி­களை நினை­வு­கூ­ரும் செயற்­பா­டு­கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த அர­சி­யல் போக்­கைக் கருத்­தில் எடுக்­காது இருந்­தால், போரை வெற்­றி­கொண்ட எமது இரா­ணு­வத்தை பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் தேவைக்­கா­க­வும் அர­சி­யல் நோக்­கங்­க­ளுக்­கா­க­வும் காட்­டிக்­கொ­டுக்­கும் செயற்­பா­டு­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டால், இந்த நாடு 30 ஆண்­டு­ கா­லம் பின்­னோக்­கிப் பய­ணிப்­ப­து­டன், மீண்­டும் தமிழ் மக்­க­ளு­டன் ஆயு­தப் போராட்­டத்தை முன்­னெ­டுக்க வேண்­டிய சூழல் உரு­வா­கும்.

இவ்வாறு முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச தெரிவித்தார். கடு­வ­லை­யில் நேற்று இடம்­பெற்ற மக்­கள் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

பயங்­க­ர­வா­தச் செயல்­க­ளில் ஈடு­பட்ட விடு­த­லைப் புலி­கள் விடு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர். நல்­லி­ணக்­கத்­துக்­காக இத­னைச் செய்­வ­தாக அரசு சொல்­கின்­றது. நல்­லி­ணக்­கம் என்ற பெய­ரில் பிரி­வி­னை­வா­தத்­துக்கு இடம் கொடுத்து பயங்­க­ர­வா­தி­களை நினை­வு­கூ­ர­வும் அவர்­க­ளுக்­கான நினை­வுத் தூபி­களை எழுப்­ப­வும் இடம் கொடுக்­கப்­ப­டு­கின்­றது என்­றால் நாட்­டின் உண்­மை­யான நல்­லி­ணக்­கம் அது­வாக அமை­யாது.மைத்­திரி அரசு ஆட்­சிக்கு வந்து, விடு­த­லைப்பு லிகளை நியா­யப்­ப­டுத்தி எமது இரா­ணு­வத்தை குற்­ற­வா­ளி­கள் என்ற நிலைப்­பாட்­டிற்கு கொண்­டு­வந்து பன்­னாட்­டுச் சமூ­கத்தை திருப்­திப்­ப­டுத்­தும் நோக்­கத்­தில் செயற்­பட்டு வரு­கின்­றது.

அவ்­வா­றன ஒரு சூழல் ஏற்­பட்­டால் மீண்­டும் எமது இரா­ணு­வத்­தி­னர் தமது உயிர்­களை தியா­கம் செய்து நாட்­டினை மீட்­டெ­டுக்க முன்­வர மாட்­டார்­கள்.

வடக்­கில் இன்று இடம்­பெற்­று­வ­ரும் செயற்­பா­டு­களை கருத்­தில் கொள்­ளாது அவர்­க­ளின் நோக்­கங்­க­ளுக்கு இடம்­கொ­டுத்து வந்­தால் மீண்­டும் பார­தூ­ர­மான விளை­வு­க­ளைச் சந்­திக்க நேரி­டும். நல்­லி­ணக்­கம் என்ற பெய­ரில் நாட்­டில் மிகப்­பெ­ரிய அச்­சு­றுத்­தல்­களை சந்­திக்க நேரி­டும்.
இங்கு எம்மை இரா­ணுவ வெற்றி தினத்தை கொண்­டாட வேண்­டாம் என்று கூறும் நபர்­கள் வடக்­கில் புலி­களை நினை­வு­கூ­று­வதை அனு­ம­தித்­துள்­ள­னர்.

இரா­ணுவ வெற்றி தினம் நல்­லி­ணக்­கத்­துக்­குத் தடை என்­றால் புலி­களை நினைவு கூறு­வது நல்­லி­ணக்­கத்தை பாதிக்­காதா? எந்த கொள்­கை­யின் அடிப்­ப­டை­யில் அரசு இவ்­வா­றான தீர்­மா­னங்­களை முன்­னெ­டுக்­கின்­றது.

வடக்­கில் ஒரு வார காலம் துக்க தினம் கடைப்­பி­டிக்க முடி­யும். பாட­சா­லை­க­ளில், பல்­க­லைக் கழ­கங்­க­ளில் கொடி­களை பறக்­க­விட்டு புலி­களை நினை­வு­கூ­றும் செயற்­பா­டு­கள் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் எமது இரா­ணு­வத்­தி­னர் இன்று சிறைச்­சா­லை­க­ளில் அடைத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளுக்கு பிணை வழங்­கக்­கூட தயா­ராக இல்லை.

இரா­ணு­வம் பொது­மக்­களை கொன்­றது என்ற கூற்று மிக பார­தூ­ர­மா­னது. அவ்­வா­றான எந்­தச் செயற்­பா­டு­க­ளும் இரா­ணு­வத்­தி­ன­ரால் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. பொது­மக்­களை இலக்கு வைத்து இரா­ணு­வத் தாக்­கு­தல்­கள் இடம்­பெ­ற­வில்லை என்று என்­னால் உறு­தி­யாக கூற முடி­யும். நாம் தூய்­மை­யான போரை முன்­னெ­டுத்­தோம். எமது கைக­ளில் இரத்த கறை­கள் இல்லை.

ஆனால் பழி­வாங்­கு­வது மட்­டுமே இந்த அர­சின் நோக்­க­மாக உள்­ளது. இன்று புலம்­பெ­யர் புலி அமைப்­பு­க­ளின் நோக்­கங்­களை நிறை­வேற்­ற­வும், மேற்கு நாடு­க­ளின் கட்­ட­ளை­களை நிறை­வேற்­ற­வும் இரா­ணுவ தண்­டிப்பு கொள்­கை­யினை அரசு கடைப்­பி­டித்து வரு­கின்­றது. மக்­கள் தெளி­வாக சிந்­திக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது. எமது நாட்­டின் இரா­ணு­வத்தை பாது­காக்க முன்­வ­ர­வேண்­டும். ஐக்­கி­ய­மான இலங்­கையை உரு­வாக்க வேண்­டும் – என்­றார்.

Previous Post

புலிகளை நினைவு கூருவதை ஏற்றுக் கொள்ள முடியாது

Next Post

யாழ் நல்லூரில் வாள்­க­ளைக் காட்டி கொள்ளை

Next Post

யாழ் நல்லூரில் வாள்­க­ளைக் காட்டி கொள்ளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures